ஃபேஸ்புக் கணக்கின் ஊடாக ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல்: இளைஞருக்கு விளக்கமறியல்

தனது ஃபேஸ்புக் கணக்கின் ஊடாக ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் இளைஞரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று உத்தரவிட்டார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தமது கட்சிக்காரர் தனது ஃபேஸ்புக் கணக்கில் அவ்வாறு எதனையும் பதிவு செய்யவில்லை என சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கூறினார்.
எவ்வாறாயினும், முதற்கட்ட விசாரணைகளின் ஊடாக சந்தேகநபரே அதனைப் பதிவேற்றியுள்ளமை தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

Label Daftar

Label Cloud